காக்னிசென்ட் நிறுவனத்தின் வங்கிக்கணக்குகள் முடக்கம்: வருமான வரித்துறை அதிரடி!
காக்னிசென்ட் ஐடி நிறுவனத்தின் வங்கிக்கணக்குகளை வரிமானவரித்துறை முடக்கி அதிரடி காட்டியுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசென்ட் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் இந்தியர்கள் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நிறுவனத்தின் வங்கிக்கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.
பங்கு விநியோக வரி செலுத்தத் தவறிய காரணத்தால் நிறுவனத்தின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 2,500 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளதால் சென்னை, மும்பை உள்ளிட்ட நிறுவனக் கிளைகளின் வங்கிக்கணக்குகளும் நிறுவனத்தின் வைப்பு நிதியும் முடக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காக்னிசென்ட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், காக்னிசென்ட் நிறுவனம் வருமாந வரி, பங்கு விநியோக வரி ஆகியவற்றை முறைப்படி செலுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால், நிறுவனத்தின் விளக்கம் முறையானதாக இல்லை என வருமான வரித்தறை பதிலளித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை காக்னிசென்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனம் விதிமுறைக்கு உட்பட்டு அனைத்து வரிகளையும் செலுத்தியதாகவும் இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இனி வருமானவரித்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com