வாழ்நாள் முழுவதும் அதிபராக தொடர ஜி ஜின்பிங் முடிவு?
சீனாவின் அதிபராகக் ஜி ஜின்பிங் கடந்த 2012 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். பின்னர் அவரது பதவிக்காலம் 2022ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாடு பீஜிங் நகரில் கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்தது. இந்த மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டன. அதையொட்டி அவரது பதவிக்காலத்தை மேலும் 15 ஆண்டுகளுக்கு நீட்டிக்கக் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி வரும் 2035 ஆம் ஆண்டு வரை ஜி ஜின்பிங் சீன அதிபராகப் பதவி வகிப்பார்.
இதன்பிறகு அந்தக் மாநாட்டில் ஜி ஜின்பிங் 2035 ஆம் ஆண்டு வரையிலான வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார். இந்தக் செயல்பாடுகள் மூலம் ஜி ஜின்பிங் சீனாவை உலக வல்லரசாக மாற்ற நினைக்கிறார் என்றும் அவர் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக விரும்புவதாகவும் சீன அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.