மீண்டும் சுனாமி.. நிலைகுலைந்த துருக்கி மக்கள்!

சுனாமியை அவ்வளவு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இப்போது மீண்டும் சுனாமி உலகை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. துருக்கி அருகே ஏஜியன் கடல் பகுதியில் சில மணி நேரங்களுக்கு முன்பு 7.0 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. நிலநடுக்கத்தால் கடல் நீர் பெருக்கடுத்து தெருக்களில் ஓடியது. எனினும் சுனாமி பெரிய அளவில் இல்லை. அதேநேரம் நிலநடுக்கத்தால் இருபதுக்கும் அதிகமான கட்டடங்கள் பெயர்ந்து விழுந்தது. துருக்கியை போலவே, கிரீஸ் நாட்டிலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையில் மக்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக நிலநடுக்கத்தால் மத்திய இஷ்மீர் பகுதியில் பல அடுக்கு கொண்ட மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தது. இதனால் எழுந்த புகைமண்டலம் நகரத்தின் பல பகுதிகளில் பரவியது. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆறு பேர் சிக்கியிருக்கலாம் என துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோயுலு முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளார். இதனால் துருக்கி மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.

More News >>