உலகின் காஸ்ட்லியான தேர்தல்...

அமெரிக்காவில், அடுத்த மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தல் தான், தேர்தலுக்காக மிக அதிகமான பணம் செலவழிக்கப்பட்ட தேர்தலாக, வரலாற்றில் இடம் பெற உள்ளது.இந்த தேர்தலுக்கு, 81 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என முதலில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என, தெரிய வந்துள்ளது.கடந்த, 2016ல் நடந்த தேர்தலில் ஏற்பட்ட செலவை விட, இது இரு மடங்கு அதிகமாகும்.இது தவிர இன்னொரு சிறப்பாக நன்கொடை வாயிலாக அதிக நிதி பெற்ற வேட்பாளரும் இந்த தேர்தலில் தான் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். அவர் ஜோபிடன் தான் அவர். 6,650 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெற்ற, முதல் அதிபர் வேட்பாளராக அவர் உள்ளார்.

More News >>