பணத்துக்கு ஆசைப்படுகிறார்களா அமெரிக்க டாக்டர்கள்... கொரோனா விஷயத்தில் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

உலகின் வல்லரசை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். அங்கு தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி செல்கிறது. இதனால் செய்வதறியாது அமெரிக்க மக்கள் திகைத்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா விஷயத்தில் அமெரிக்க டாக்டர்கள் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை அதை எழுப்பியவர் டொனால்ட் டிரம்ப். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ``இதயப்பிரச்சினை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நோயாளிகள் கொரோனாவால் உயிரிழந்தால், அவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்படுகிறார்கள்.

கொரோனாவில் யாரேனும் உயிரிழந்தால் நம் டாக்டர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும். அதனால் அவர்கள் உயிரிழப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்துகின்றனர். அதேநேரம் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் இதயப்பிரச்சினை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனா வைரஸால் உயிரிழந்தால், அவர்கள் இதயப்பிரச்சினை, புற்றுநோயால் இறந்ததாகவே அறிவிக்கப்படுகிறது.

நமது நாட்டில் தேசியளவில் வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா அவசர சிகிச்சை பெறுகின்றனர். உலகில் மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் அதிகளவு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் பாதிப்புகள் அதிகரிக்கிறது. ஆனால் தற்போது இறப்பு எண்ணிக்கை குறைகிறது. பாதிப்பிலிருந்து மக்கள் மீள்கின்றனர். அதற்கு சாட்சி நானும், எனது மனைவியும்" எனக் கூறியிருக்கிறார்.

More News >>