இந்திய செயலிகளை அடையாளங்காட்ட புதிய தளம்.. மித்ரன் டிவி அறிமுகம்...!
இந்தியாவில் செய்யப்படும் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் பல்வேறு தேவைகளுக்கான இந்தியச் செயலிகளை அடையாளம் காட்டுவதற்கு பிரத்யேக தளத்தை மித்ரன் டிவி என்ற வீடியோ தளம் அறிமுகம் செய்துள்ளது.இ-ஆளுமை, பயன்பாடு, வேளாண்மை, கேமிங், பொழுதுபோக்கு, வாழ்வியல், இ-வழிகற்றல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலிகளை ஒன்றாக இணைக்கும் 'ஆத்மநிர்பார் ஆப்ஸ்' என்ற தளத்தினை மித்ரன் டிவி உருவாக்கியுள்ளது.
தற்போது 'ஆத்மநிர்பார் ஆப்ஸ்' தளத்தில் Kifayat, Grocit, Jain Thela, Home Shoppy, YourQuote, Vridhi Stores, Xploree AI Keyboard, mParivahan என்பவை உள்ளிட்ட 100 செயலிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் 500 செயலிகளை இணைக்க முடிவு செய்திருப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. சுயச் சார்பு செயல்பாட்டையும் உள்நாட்டு வர்த்தகத்தையும் ஊக்குவிக்க இம்முயற்சியைச் செய்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.