தேனிலவை தள்ளிவைத்து விட்டு ஷூட்டிங் செல்லும் புதுப்பெண்..
தமிழ்,தெலுங்கு போன்ற திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி கொண்டிருப்பவர் தான் காஜல் அகர்வால். இவர் மாரி, துப்பாக்கி, கோமாளி போன்ற ஹிட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரது பெற்றோர்கள் காஜலிடம் கல்யாணம் பற்றி பேசினாலே படம் ஷூட்டிங் என்று சொல்லி 8 மாதம் கழித்து தான் காஜல் வீட்டுக்கு திரும்புவாராம். திருமணத்தில் இவருக்கு விருப்பம் உள்ளாதது போல் நடந்து கொண்டார். இவரது தங்கைக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது யாவரும் அறிந்தது.
இந்நிலையில் கொரோனா காரணத்தால் ஷூட்டிங் செல்லாமல் வீட்டில் இருந்த காஜலை அவரது பெற்றோர்கள் போராடி திருமணத்துக்கு சம்மதம் சொல்ல வைத்து விட்டனர். இதையடுத்து காஜலுக்கு மும்பையில் 30 ஆம் தேதி கெளதம் கிச்லுவுடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. இவர்களது திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இவரது திரையுலக நண்பர்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். கொரோனா காலம் என்பதால் திருமணத்தில் மொத்தமும் 50 பேர் தான் கலந்து கொண்டனர். தமிழில் காஜல் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிறகு தெலுங்கில் 'ஆச்சார்யா' படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு புது தம்பதியர்கள் தேனிலவு செல்வது வழக்கம். ஆனால் காஜல் 'ஆச்சார்யா' திரைப்படத்தில் நடிக்கவுள்ளதால் தனது தேனிலவை தள்ளி வைத்து விட்டு ஷூட்டிங்கில் கவனம் செலுத்தயுள்ளதாக கூறியுள்ளார். இதிலிருந்து இவர் செய்யும் வேலையில் எவ்வளவு உண்மையாக இருக்கிறார் என்பது புலப்படுகிறது..