3 பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து நெகிழ வைத்த நடிகை.. ஜீலகர பெல்லம் முறைக்கு ரசிகர்கள் பாராட்டு..

தமிழ், தெலுங்கு படங்களில் பெரும்பாலும் பாலிவுட், மல்லுவுட் நடிகைகள் தான் ஹீரோயினாக நடிக்கிறார்கள். 50 அல்லது 60 படங்களில் நடித்த பிறகு திருமணம் என்றதும் தங்களது பாரம்பரிய முறைப்படித்தான் செய்துக் கொள்கிறார்கள். அந்த விதத்தில் பழையதை மறக்காமல் தன்னுடைய திருமணத்தை மூன்று மத சடங்குகள் முறைப்படி நடத்தி அசத்தி இருக்கிறார் பிரபல நடிகை. நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 30ம் தேதி தனது காதலன் தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை வீட்டில் நடந்த ஆடம்பர மில்லாத அடக்கமான விழாவில் திருமணம் செய்துக் கொண்டார். இந்த விழாவில் குடும்ப நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடுகளும் கடை பிடிக்கப்பட்டன. இதில் விசேஷசம் என்ன வென்றால் காஜல் பஞ்சாபி சமூதாயத்தை சேர்ந்தவர், கவுதம் காஷ்மீர் சமூகத்தை சேர்ந்தவர். அவரவர்கள் முறைப்படி திருமணத்தை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர். அவர்களிடம் தனது விருப்பத்தையும் காஜல் தெரிவித்தார்.

மும்பையில் இருந்ததைவிட தென்னந்தியாவில் அதிக நாட்களை கழித்திருக்கிறேன் பல தெலுங்கு படங்களில் திருமண காட்சிகளில் நடித்திருக்கிறேன். நிஜ திருமண விழாக்களிலும் அங்கு கலந்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் எனது நிஜ திருமணத்தில் தென்னிந்திய அதாவது தெலுங்கு முறைப்படியான சடங்கையும் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அவரது குடும்பத்தினர் மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டனர். பஞ்சாபி, காஷ்மீரி முறையுடன் தெலுங்கு முறைப்படியான சடங்கின்படியும் காஜல் திருமணம் நடந்தது. இதுகுறித்து காஜல் தனது இணையதள பக்கத்தில் கூறும்போது,காஷ்மீரி, பஞ்சாபி திருமண சடங்குகளை செய்ததில் மகிழ்ச்சி அத்துடன் தென்னிந்தியாவுடனான எனது தனிப்பட்ட உறவுகள் முக்கியம். ஜீலகர் பெல்லம் முறைபடியும் திருமண சடங்கு நடந்தது. ஒரு தெலுங்கு திருமணத்தில், ஜீலகர பெல்லம் மணமகனும், மணமகளும் ஒன்றிணைந்த திருமணத்தை குறிக்கிறது.

ஜீலகர்ரா (சீரகம்) மற்றும் பெலாம் (வெல்லம்) ஒரு தடிமனான பேஸ்டாக தயாரிக்கப்பட்டு தமலபாகு (வெற்றிலை) மீது போடப்படுகிறது. புரோகிதர் வேதங்களிலிருந்து மந்திரங்களை உச்சரிக்கும் போது மண மகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் தலையில் கைவைக்கிறார்கள். இந்த விழா முடிந்தபிறகுதான் மணமகனும், மணமகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள், இந்த நல்ல விழா தம்பதியினர் கசப்பான மற்றும் இனிமையான காலங்களில் ஒன்றாக இருப்பார்கள் என்பதைக் குறிக்கிறது. ஒரு திருமணத்தைத் திட்டமிடுவது பல்வேறு நடை முறைகளை உள்ளடக்கியது. இந்த திருமணத்தில் கொரோனா தொற்றுநோய் நிச்சயமாக ஒரு சவாலாக இருந்தது. எவ்வாறாயினும், நாங்கள் ஒரு சிறிய திருமணத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்தோம்.

எங்கள் விருந்தினர்கள் அனைவரையும் வைரஸ் தொற்று சோதித்துப் பார்த்தோம், எங்கள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் ஒரு சமூக இடைவெளியை உருவாக்கினோம். இதில் கலந்துகொள்ள முடிந்த எங்கள் அன்புக்குரிய அனைவருக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தொலை தூரத்திலிருந்து கிட்டத்தட்ட இணைந்தவர்கள் மிகவும் தவறவிட்டனர், விரைவில் உங்கள் அனைவரையும் நேரில் சந்திப்போம் என்று நம்புகிறோம். இவ்வாறு காஜல் அகர்வால் தெரிவித்தார். காஜல் தென்னிந்திய முறை படியும் திருமண சடங்கு செய்ததை ரசிகர்கள் வரவேற்று பாராட்டி உள்ளனர்.

More News >>