தமிழ் பட இளம் இசை அமைப்பாளார் திடீர் மரணம்..
கொரோனா ஊரடங்கு பலவித மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. பல அதிர்ச்சிகளையும் மக்களுக்கு தந்திருக்கிறது. கொரோனாவில் திரையுலக பிரமுகர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் கொரோனா வராது என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில் அமிதாபச்சனுக்கு கொரோனா. ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா. அபிஷேக் பச்சன், விஷால், ராஜமவுலி , எஸ்பி.பாலசுப்ரமணியம், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா என பலருக்கு கொரோனா தொற்று பரவியது. இவர்கள் எல்லோருமே சிகிச்சைக்கு பிறக்கு மீண்டாலும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார்.
டாக்டர் நடிகர் ராஜசேகர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவர் குணம் அடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் கொரோனா தொற்றில்லாத போதிலும் இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா. நடிகர் சேது. வடிவேல் பாலாஜி ஆகியோர் மாரடைப்பில் மரணம் அடைந்தனர். இந்நிலையில் இளம் இசை அமைப்பாளர் ஒருவர் மரணம் அடைந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. புதுமுகங்கள் நடித்த படம் விசிறி இப்படத்துக்கு இசை அமைத்தவர் நவீன் சங்கர். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இவர் சாலிகிராமத்தில் மியூசிக் ஸ்டுடியோ வைத்திருந்தார்.
வீட்டுக்கு ஒரே மகனான நவீன் சங்கர் கடந்த ஒரு வாரமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் இல்லை என்று கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.