கத்தியை விட்டோம் கைகளால் பறித்தோம் : தேயிலைக்கு நல்ல விலை கிடைக்குது
தேயிலைக்கு பெயர் பெற்ற நீலகிரியில் 1998ம் ஆண்டுக்கு பின் விலை சரிவு ஏற்பட்டு தேயிலை விவசாயிகளுக்கு மிக குறைந்த விலையே கிடைத்துவந்தது ஆனால் இந்த ஆண்டு விலை அதிகரித்துள்ளது. தரமான பசுந்தேயிலைக்கு இலைக்கு கிலோ 30 முதல் 33 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இரு இலைகளும், ஒரு மொட்டும் கொண்ட நுனி பகுதி தான் முதல்தர இலை என்று கணக்கிடப்படுகிறது. ஆனால் விலையை கருத்தில் கொண்டு பல விவசாயிகள் இலையை கைகளால் பறிக்காமல் கத்திகளை வைத்து ஒரு அடி நீளம் வரை வெட்டிக் கொண்டு வருகின்றனர். இது தரமற்ற இலையாக கருதப்படுகிறது.
எனவே, இதுநாள் வரை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் இருந்து வந்தது . தற்போது பெரும்பாலான விவசாயிகள் கைகளால் இந்த இலைகளைப் பறிப்பதான் மூலம் நல்ல விலை கிடைத்து விவசாயிகளுக்கு மனநிறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் 584.43 கோடி ரூபாய்க்கு தேயிலை தூள் விற்பனையாகியுள்ளது. இதே நிலை நீடிக்க வேண்டுமானால் விவசாயிகள்தான் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என தேயிலைத்தூள் தொழிற்சாலை அதிபர்கள் வலியுறுத்துகின்றனர்.