வெள்ளிவிழா படங்கள் இயக்கிய அப்பாவை போல் மகன் சாதிப்பாரா..? டைரக்டர் ஆகும் பிரபல இயக்குனர் வாரிசு..
கோலிவுட்டில் 80 காலகட்டங்களில் திரையுலகுக்கு வந்த நடிகர்கள், இயக்குனர்களின் வாரிசுகள் கோவுட்டில் தற்போது வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் சாதித்திக்கின்றனர், பலர் இன்னும் சாதிக்க போரடிக் கொண்டிருக்கின்றனர். 80களில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை இயக்கி அளித்தார். இந்திக்கும் சென்று படம் இயக்கினார். அவரது மகன் விஜய் நடிக்க வந்து படிப்படியாக வளர்ந்து இன்று முன்னணி நடிகராக திகழ்கிறார்.மண்வாசனை, அலைகள் ஓய்வதிலை, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் முதல் மரியாதை என பல்வேறு சாதனை படங்களை தந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
இவரது மகன் மனோஜ் நடிகர் ஆனார், முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு என பல வெற்றி படங்களை அளித்தவர் கே.பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு நடிகர் ஆனார். ஆண்பாவம் படத்தை இயக்கி நடித்து முதல் படத்தையே வெற்றிப்படமாக படைத்தவர் பாண்டிராஜன் இவரது மகன் பிருத்வி நடிகர் ஆனார், மன்னன் சந்திரமுகி என சூப்பர் ஹிட் படங்களை அளித்தவர் பி.வாசு இவரது மகன் சக்தி நடிகர் ஆனார். இதுபோல் இன்னும் சில இயக்குனர்களின் மகன்கள் நடிகர்கள் ஆகினர். ஆனால் அப்பாவை போல் அவர்களால் சாதிக்க முடியவில்லை. ஒருவேளை வாரிசுகள் அனைவருமே தந்தையைப்போல் இயக்குனர் ஆகாமல் நடிகர்கள் ஆனது மைனஸ் ஆகிவிட்ட தோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் வாரிசுகள் எல்லோருமே சோர்ந்து போகாமல் நடிப்பில் அக்கறையுடன் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் மட்டும் அப்பாவின் துறைக்கு தற்போது மாறியிருக்கிறார். அதாவது இயக்குனர் ஆகி இருக்கிறார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவரது மகன் மனோஜ். தாஜ்மகால் படத்தில் ஹீரோவாக நடித்தார். பின்னர் கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் தான் தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். லிப்ரா புரடக்ஷன் பட நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் மனோஜ் குமார். அவருக்கு பாரதிராஜா ஆசியும் வாழ்த்தும் தெரிவித்தார். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப குழுவினர் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 2021ம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கி அதே ஆண்டில் படம் வெளியாகிறது. தந்தையை பாரதிராஜா போல் சாதிக்க வேண்டும் என்று பலரும் மனோஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.