திரைப்படங்களை மிஞ்சும் காட்சி: குடிநீர் பைப் உடைந்து தூக்கி வீசப்பட்ட கார் (வீடியோ)
மும்பையில், விரிசலடைந்த குழாய் உடைந்து பல அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த நீரில் கார் தூக்கி வீசப்பட்ட காட்சி நேரில் பார்த்தவர்களை அதிர வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையங்களில் பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை போரிவாலி என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் சேதமடைந்து இருந்தது. இதில், இருந்து தண்ணீர் சிறிது சிறிதாக கசிந்துக் கொண்டு இருந்தது. இந்த விரிசல் அதிகரித்த நிலையில், நேற்று இரவு குழாயில் இருந்து தண்ணீர் மிக வேகமாக வெளியேறியது. தண்ணீர் வெளியேறும் இடத்தில் ஏற்கனவே பெரிய சொகுசு கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது திடீரென தண்ணீர் வேகமாகவும் மிக மிக அழுத்தத்துடனும் வெளியேறியதால் அங்கு இருந்த கார் பல அடி தூரத்திற்கு மேலே தூக்கி வீசப்பட்டது. இந்த காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதேபோல், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்கள் சோமடைந்தன.குழாயில் இருந்து தொடர்ந்து கசிவு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி சுற்றிலும் உள்ள வீடுகள், வானங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. அங்குள்ள மக்களும் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குழாயை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com