இந்த நீரை பருகினால்.. மூட்டு வலியெல்லாம் பறந்து விடுமாம்..!

வயசு ஆக ஆக கால், கை மற்றும் மூட்டு வலிகள் போன்றவை ஏற்படும். இதனை குணப்படுத்த இயற்கை முறையில் ஏராளமான வழிகள் உள்ளன. இதனை தினமும் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் பெற்று நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது. அது மட்டும் இல்லாமல் சளி பிடித்து இருந்தால் இந்த நீர் முழுவதையும் குணமாக்க உதவுகிறது. செரிமானம், மலசிக்கல் போன்ற பிரச்சனையை குணப்படுத்த முக்கிய பங்கு இந்த நீர் வகிக்கின்றது. சரி வாங்க இந்த நீர் எப்படி தயார் செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-கருஞ்சீரகம் - 1கப்ஓமம் - 3/4 கப் சீரகம் 1/2 கப் தனியா - 1/2 கப் வெந்தயம் - 1/4 கப்

செய்முறை:-கருஞ்சீரகம், ஓமம், சீரகம், தனியா, வெந்தயம் ஆகிய பொருள்களை கொடுக்கப்பட்ட அளவில் மிக்சியில் தனி தனியாக அரைத்து கொண்டு ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரைத்து வைத்த பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் பொடி எடுத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆனவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

கொதிக்க வைத்த நீரை வடித்துத் தேவைப்பட்டால் பனஞ்சர்க்கரையை கலந்து பருகலாம். இதனை தவறாமல் குடித்து வந்தால் கை, கால், மூட்டு, முதுகு போன்ற வலி எல்லாம் பறந்து போகும். உடனடி தீர்வு கிடைக்கும் ஆதலால் இதனை தொடர்ந்து பயன்படுத்துங்கள்..

More News >>