ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித்துக்கு ஓராண்டு தடை!

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய, ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு தலா ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் பந்தை விதிகளுக்குப் புறம்பாக சேதப்படுத்தியது அம்பலமானது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பேட்ஸ்மேன் பேங்க்ராஃப்ட் ஆகியோர் உடனடியாக சொந்த நாட்டுக்குத் திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தும் என்று கூறப்பட்டது.

இதனால், இவர்களின் பதவி பறிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஸ்மித் ஒரு டெஸ்டில் விளையாட தடை, 100 சதவீத சம்பளம் அபராதமாக விதித்தது. பான்கிராப்டுக்கு, 75 சதவீத சம்பளம் மட்டும் அபாராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் குறித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு சார்பில் தனியாக விசாரிக்கப்பட்டது. முடிவில், ஸ்மித், வார்னர் இருவரும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. அடுத்த இரு ஆண்டுகளுக்கு இவர்கள் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக செயல்படவும் தடை விதிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>