கேரக்டர் தான் முக்கியம் ராகுல் டிராவிட்டை பாருங்கள்... - உதாரணம் காட்டிய மைக் ஹஸி

கிரிக்கெட்டில் நடத்தை தான் முக்கியம்; திறமை இரண்டாம் பட்சம் தான் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “ராகுல் டிராவிட் என்று கூறினால் முதலில் நமது மனதில் தோன்றும் விஷயம் என்ன? 28 சதங்கள் அடித்துள்ளார் என்றால் அது எனக்கு ஆச்சரியத்தையே அளிக்கும். ஆனால், அவர் ஒரு சுவர். அவருக்கு அட்டகாசமான ஆட்டத்தின் நுட்பமும், பேட்டிங் உத்தியும் இருக்கிறது என்று கூறினால் எனக்கு ஆச்சரியமாக இருக்காது.

அதே சமயம், கிரிக்கெட்டை அவர் மிக நேர்மையாக ஆடினார் என்பதுதான் நிற்கும். இதுதான் உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு நினைவுக் கூரத்தக்கதாக இருக்கும். எனவே நாம் ஆடும் காலத்தில் நம்மை நாம் எவ்வாறு நடத்திக் கொள்கிறோம் என்பதுதான் நினைவில் நிற்கும்.

எனக்கு வயதாகி வருகிறது, நான் ஓய்வு பெற்றதிலிருந்து நான் பலருடன் பேசி வருகிறேன், அதன் மூலம் நான் என்ன உணர்கிறேன் என்றால், பெரும்பாலானோர் நான் எடுத்த ரன்கள் பற்றி பெரிதாகப் பேசவில்லை, நான் என்னை நடத்திக்கொண்ட விதம் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>