ஒரே படத்தில் இணையும் ரஜினி, விஜய், அஜீத் பட இயக்குனர்கள்...

தியேட்டர்காரர்கள், தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம் வி எப் எக்ஸ் கட்டணம் குறித்து மோதலை தொடங்கி இருக்கும் நிலையில் ஒடிடி தளங்கள் தமிழ் ரசிகர்களை குறி வைத்துப் புதிய திரைப் படங்கள் ரிலீஸ் செய்வதுடன் தயாரிக்கவும் தொடங்கி விட்டன. ஆந்தாலஜி பாணியில் பல பிரபல இயக்குனர்கள் இணைந்து தனித்தனியாக படம் எடுத்து அதை ஒன்றாக இணைந்து வெளியிடுவது ஆந்தாலஜி எனப்படுகிறது.

சமீபத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், கெளதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ஆன்தாலஜி படம் இயக்கினர்.ஏற்கெனவே இந்தியில் கரண் ஜோஹர், ஸோயா அக்தர், அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்களை வைத்து நெட் ஃப்ளிக்ஸ் இதுபோல் படம் தயாரித்துள்ளது.

மேலும் மலையாளம், தெலுங்கு மொழிகளில் திரைப்படம் எடுக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நெட் ஃபிளிக்ஸுக்குப் போட்டியாக ஹாட் ஸ்டார், ஜீ 5, அமேசான் ப்ரைம் என மற்ற ஒடிடி தளங்களும் இதில் கவனம் செலுத்துகின்றன.மேலும் சில்லுக்கருப்பட்டி, புத்தம் புது காலை ஆந்தாலஜி படங்களாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அடுத்து பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்கள் இணைந்து நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தை உருவாக்க உள்ளனர். விக்டிம் எனப் பெயரிடப்பட்ட இந்த ஆந்தாலஜி படத்தில் பிரபல இயக்குனர்கள் வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், சிம்புதேவன் ராஜேஷ் ஆகிய 4 இயக்குனர்கள் இயக்க உள்ளனர். வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் இப்படம் தயாராகிறது.

பா.ரஞ்சித் ரஜினியை வைத்து காலா, கபாலி படங்களையும் வெங்கட் பிரபு அஜித்தின் மங்காத்தா படத்தையும், சிம்புதேவன் விஜய் நடித்த புலி படத்தையும் இயக்கியவர்.ரஜினி, அஜீத் ,விஜய் ஆகியோரை வைத்து படங்கள் இயக்கிய இயக்குனர்கள் ஒரே படத்தில் இணைந்து பணியாற்றுவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>