மீண்டும் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை வெறுப்பேற்றும் நடிகை...!
இரண்டு முறை தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை சமூக இணையதளங்களில் வெளியிட்டு நெட்டிசன்களின் ஆபாச தாக்குதல்களுக்கு இரையான மலையாள நடிகை அனஷ்வரா ராஜன் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை வெறுப்பேற்றி வருகிறார்.மலையாள சினிமாவில் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இளம் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் அனஷ்வரா ராஜன். இவர் 'உதாகரணம் சுஜாதா' என்ற படத்தில் நடிகை மஞ்சு வாரியரின் மகளாக மலையாள சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்னர் இவர், 'தண்ணீர் மத்தன் தினங்கள்', 'எவிடே', 'ஆத்ய ராத்திரி' 'மை சான்டா' உள்படப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் 'ராங்கி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் சில கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த படங்கள் வெளியானது தான் தாமதம், நெட்டிசன்கள் அவருக்கு எதிராக ஆபாச தாக்குதல்களைத் தொடுக்கத் தொடங்கினர்.
'சின்ன வயசு தானே உனக்கு, இப்போதே இப்படி எல்லாம் தேவையா? உன்னுடைய கால்களை எல்லோருக்கும் காட்டியே வேண்டும் என்று என்ன கட்டாயம் உனக்கு? என்பன போன்ற பல கண்டனங்களை நெட்டிசன்கள் பதிவிட்டிருந்தனர். அதுமட்டுமில்லாமல் மிக ஆபாசமாகவும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்நிலையில் அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவாக சில மலையாள நடிகைகளும் களத்தில் இறங்கினர். பிரபல நடிகைகள் ரீமா கல்லிங்கல், அஹானா கிருஷ்ணா, அனார்கலி மரிக்கார், கனி குஸ்ருதி உட்படப் பல நடிகைகள் நெட்டிசன்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இவர்கள் அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்களது கால்களைக் காண்பித்து கவர்ச்சியான போட்டோக்களை சமூகத் தளங்களில் பகிர்ந்தனர்.
ஒருவர் தங்களுக்கு விருப்பப்பட்ட எந்த உடையை வேண்டுமானாலும் அணியலாம். அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது என்று நடிகை ரீமா கல்லிங்கல் கூறினார். இந்நிலையில் நெட்டிசன்களுக்கு மீண்டும் வெறுப்பேற்றும் வகையில் நடிகை அனஷ்வரா ராஜன் மேலும் சில தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். பாத்ரூமில் பயன்படுத்தும் உடையுடன் கூடிய சில போட்டோக்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் வந்த பின்னரும் நெட்டிசன்கள் சும்மா இருக்கவில்லை. அவருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.