ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு: மத்திர அரசு
அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு உள்பட பல்வேறு கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், வங்கி கணக்குகள், கைபேசி எண், ரேசன் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்காக, இம்மாதம் 31ம் தேதி வரையில் காலக்கெடு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காலக்கெடுவை நீட்டிக்க வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் தனிநபர் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஆதார் எண்ணை 88 சதவீதம் பேர் தான் இணைத்துள்ளனர். மீதமுள்ள 12 சதவீதம் பேர் பல்வேறு காரணங்களால் இணைக்கவில்லை. இதனால், இவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் போகும். அதனால், ஆதார் எண் இணைக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என வாதாடப்பட்டது.
ஆனால், இறுதியில் ஆதார் எண் இணைக்க காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டது. இந்நிலையில், ஆதார் எண் இணைக்கும் காலக்கெடுவை வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com