படத்துக்கு வரும் எதிர்ப்பால் பிரபல நடிகை திகில்.. வருகை ரத்து, ஷூட்டிங் தள்ளிவைப்பு..

பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி தற்போது இயக்கி வரும் படம் ஆர் ஆர் ஆர். ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம் இந்தி என் ஐந்து மொழிகளில் உருவாகிறது. அதற்கேட்ப ஐந்து மொழிகளில் பிரபல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தியில் படம் வெளியாவதால் அஜய் தேவ்கன், அலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தி நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலையின் போது சர்ச்சையில் சிக்கியவர் அலியாபட். ஒரு பேட்டியின் போது சுஷாந்த் சிங் யார் என்பதே தெரியாது என்று சொல்லி அவரை கண்டு கொள்ளாததுபோல் அலியா பட் பதில் சொல்லி சுஷாந்தை ஒதுக்கினார். இது வாரிசு நடிகைகளின் ஆணவப்போக்கு என்று சுஷாந்த் ரசிகர்கள் அலியா பட்டை வம்புக்கு இழுத்தனர்.

பின்னர் சுஷாந்த் இறந்தபிறகு இப்பிச்சனைப் பெரிதாக வெடித்தது. அவருக்கு எதிராக ரசிகர்கள் கடும் கண்டனம் தெவித்தனர். அலியாபட் நடித்த இந்தி படமொன்று ஓடிடி தளத்தில் வெளியான போது அதற்குக் கோடிக்கணக்கில் டிஸ்லைக்கை தெரிவித்து உலக அளவில் அதை ட்ரெண்டாக்கினார்கள். ஆர் ஆர் ஆர் படத்திலிருந்து அலியா பட்டை நீக்க வேண்டும் என்று ராஜமவுலிக்கு மெசேஜ் அனுப்பினார்கள். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் அலியாபாட் ஆர் ஆர் ஆர் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி இருக்கிறார். இதற்காகப் படக்குழு அவருக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளன. ஏற்கனவே ஆர் ஆர் ஆர் படத்துக்கு ஆதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையறிந்து அலியா பட் அதிர்ச்சி அடைந்தார். அவர் படப்பிடிப்பில் பங்கேற்க கண்டிஷன்கள் விதித்திருக்கிறார். நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை மட்டுமே ஆர் ஆர் ஆர் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கப்படுகிறது. அதற்குள் தனது காட்சிகளை முடிக்க வேண்டும். அதற்கேற்ப காட்சிகள் படமாக்குவதை இயக்குனர் திட்டமிட வேண்டும். ஒதுக்கிய கால்ஷீட்டிற்கு மேல் கூடுதலாக நாட்கள் நடிக்க முடியாது. ஷூட்டிங் தவிரப் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என இன்னும் சில கண்டிஷன்கள் விதித்திருக்கிறார். அதனைப் படக் குழுவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் படப் பிடிப்பு நடக்கிறது.ஸ்டியோவிற்குள்ளேயே அலியாபட் தங்குவதற்கு ஸ்டார் அந்தஸ்த்தில் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாதம் தங்கி இருந்து அலியாபட் நடிக்கிறார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செக்யூரிட்டியும் செய்யப்பட்டிருக்கிறது.ஆர் ஆர் ஆர் பட படப்பிடிப்புக்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டதற்கு காரணம் இப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்திருக்கும் டீஸரில் முஸ்லிம் தோற்றத்தில் கண்ணுக்கு மையிட்டு தலையில் குல்லா அணிந்திருப்பது போன்ற தோற்றம் கொண்ட ஸ்டில் வெளியானது. அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.பாஜகவைச் சேர்ந்த தலைவர்களும், பழங்குடித் தலைவர்களும் அடங்கிய குழு, ஜூனியர் என்.டி.ஆர் முஸ்லீம் தொப்பி அணிந்த காட்சிகளை ஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து நீக்கக் கோரி எதிர்ப்புக் குரல் எழுப்பி உள்ளனர்.

தெலங்கானா பா ஜ தலைவர் பண்டி சஞ்சய் தேர்தல் பிரசாரம் ஒன்றில் ராஜமவுலியை கடுமையாகத் தாக்கி பேசினார். உச்சக்கட்டமாக ராஜமவுலியை தாக்குவோம். படம் வெளியாகும் தியேட்டரை யார் எரிப்பார்கள் என்று தெரியாது என மிரட்டினார்.முன்னதாக பாஜகவைச் சேர்ந்த அடிலாபாத் எம்.பி. சோயம் பாபுராவும், ராஜமவுலி எங்கள் வேண்டு கோளுக்கு இணங்கவில்லை என்றால் படம் திரையிட அனுமதிக்க மாட்டேன் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான ஆர்.ஆர்.ஆரின் டீஸரில், என்.டி.ஆர் நடித்த கோமரம் பீமின் காட்சிகளில் அவர் இஸ்லாமியர்களின் தொப்பி அணிந்து, கண்களுக்குச் சூர்மாவைப் பயன்படுத்தி இருக்கின்றனர். பீம் ஒரு முஸ்லீம் தொப்பி அணிந்திருப்பதால் இந்த ஆதிவாசிகள் அனைவரும் ஆழ்ந்த வேதனை அடைந்ததாக சோயம் பாபு ராவ் கூறினார்.

கோமரம் பீம் முஸ்லீம் மன்னர்களுக்கு எதிராகப் போராடியதால், அவர் எந்த காரணத்திற்காகவும் முஸ்லீம் தொப்பி அணிந்தவராகச் சித்தரிக்கப் படக்கூடாது என்று ஆதிவாசிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.பரபரப்பான இந்த சூழலில் தான் அலியாபட் காட்சிகள் இந்தவாரம் முதல் படமாக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் ராமோஜிராவ் ஸ்டியோவிற்குள்ளேயே செய்யப்பட்டது. படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் அதையறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். படப்பிடிப்பில் அசம்பாவிதம் எதுவும் நடக்கக்கூடுமோ என்று திகில் அடைந்தார். இதையடுத்து அவரது வருகை ரத்து செய்யப்பட்டு அடுத்த மாதம் டிசம்பர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

More News >>