மருத்துவமனையில் அல்ல, நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் - முஹமது ஷமி காட்டம்

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முஹமதி ஷமியை காணச் சென்றபோது, அவர் தன்னை சந்திக்க விரும்பவில்லை என்றும் நீதிமன்றத்தில் சந்திப்பதாகவும் தெரிவித்ததாக மனைவி ஹசின் ஜஹான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், தனது முகநூல் பக்கத்தில் ஷமி பல பெண்களுடன் தகாத முறையில் தொடர்பு வைத்துள்ளதாக கூறி, அந்தரங்க விஷயங்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் சாட் விவரங்களை கசியவிட்டார்.

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த முஹமது ஷமி, எனது புகழை கெடுக்க மிகப்பெரிய சதி நடக்கிறது. என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், எனது திறமையை சீர்குலைக்கும் முயற்சியில் விரோதிகள் களமிறங்கியுள்ளனர் எனவும் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி நேற்று டேராடூனில் இருந்து டெல்லிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது. இதில், ஷமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஷமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஷமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முகமது ‌ஷமியை நேரில் காணஅவரது மனைவி ஹசின் ஜகான் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் ‌ஷமி மனைவியை சந்திக்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து ஹசின் ஜகான் கூறுகையில், “முஹமது ‌ஷமியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வேதனையுடனும், தயக்கத்துடனும் சென்றேன். ஆனால் நான் எதிர்பார்த்தது போலவே ‌ஷமி என்னை சந்திக்க மறுத்துவிட்டார். என்னை மிரட்டி நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்றார். ஆனாலும் குழந்தையை சந்தித்து மகிழ்ச்சியுடன் விளையாடினார்” என்று அவர் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>