நயன்தாரா படத்தில் நம்பமுடியாத கிளைமாக்ஸ்..

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன்' திரைப்படம், தொடக்கம் முதலே திரை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திரைப்படமாகவுள்ளது. உலகளவில் டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் வரும் தீபாவளி நன்நாளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் ஆச்சர்யம் தரும் கிளைமாக்ஸ் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

"மூக்குத்தி அம்மன்" திரைப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்த க்ளை மாக்ஸ் 7500 துணை நடிகர்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இக்காட்சியை படமாக்குவது இயக்குநர்கள் குழு ஆர்.ஜே. பாலாஜி, என்.ஜே சரவணன் ஆகியோருக்கும் மற்றும் மொத்த படக் குழுவினருக்கும் கடுமையான சவாலாக இருந்தது. மிகக் குறுகிய காலத்தில் கடும் உழைப்பில் மிகப்பெரும் ஜனத்திரள் கொண்டு இக்காட்சியைப் படமாக்கியுள்ளனர் படக் குழுவினர்.

யாருமே எதிர்பாராத வகையில் பெரும் ஜனத்திரள் கொண்ட இக்காட்சியைப் படக்குழு ஒரே நாளில் படமாக்கியுள்ளது. பொது முடக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ள நிலையில், இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்துப் படப் பிடிப்பு நடத்துவதென்பது எந்த ஒரு திரைப்பட குழுவும் நினைத்தே பார்த்திராத பணியாகும். நல்லவேளையாகப் படத்தின் இப்பகுதியை இந்த பொது முடக்கக் காலத்திற்கும் முன்னதாகவே படமாக்கியதில் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது. “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி, என்.ஜே சரவணன் உடன் இணைந்து இயக்கியுள்ளார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர். ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.

நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஆர்,ஜே. பாலாஜி முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான ஊர்வசி, மௌலி,அஜய் கோஷ், ஸ்ம்ருதி வெங்கட், மது, அபிநயா, மனோபாலா, மயில்சாமி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.சமீபத்தில் இப்படத்திற்காக எல் ஆர்.ஈஸ்வரி பாடியா பக்தி பாடல் வீடியோவை வெளியிட்டார். முன்னதாக எல். ஆர்.ஈஸ்வரி படப்பிடிப்பு தளத்துக்கு வந்தபோது அவருக்கு மயிலாட்டம் மேளம் தாளம் முழங்க ஆர்.ஜே.வரவேற்பு அளித்தார்.

மூக்குத்தி அம்மன் படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். செல்வா RK எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டன்ட் சில்வா சண்டை பயிற்சி அளித்திருக்கிறார் விஜயகுமார் ஆர். அரங்கம் அமைக்கிறார். பா. விஜய் பாடல்கள் எழுதி உள்ளார்.நயன்தாரா அறம் படத்தில் லேசாக அரசியல் வசனம் பேசினார். அதன்பிறகு அரசியல் வசனங்கள் பேசி அவர் நடிக்கவில்லை. மூக்குத்தி அம்மன் பக்தி படம் என்றாலும் இதில் அம்மன் வேடத்தில் வந்து அவர் வசனம் பேசி இருக்கிறார். அதுவும் தற்போதைய சாமியார்களுக்கு எதிரான வசனங்களை அடுக்கித் தள்ளியிருக்கிறாராம்.

More News >>