வேகமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க... இதனை பின்பற்றுங்கள்..

நெல்லிக்காயில் அதிக அளவிலான இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளது. இயற்கையின் ஒட்டு மொத்த வரப்பிரசாதமாய் மருத்துவ துறை நெல்லிக்கனியை போற்றிவருகின்றனர். தினமும் வெறும் வயிற்றில் நெல்லி கனியை சாப்பிடுவதால் மூடி அடர்த்தி பெறுதல், உடல் எடை குறைத்தல், எலும்பு வலிமை பெருதல் போன்ற பல நன்மைகளை பெறலாம். உடலில் எந்த தீங்கும் நெருங்க கூடாது என்று நினைத்தால் நெல்லி ஜூஸ் பருகலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை தவறாமல் செய்து பாருங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருள்கள்:-நெல்லிக்காய் -3மிளகு -5கிராம்பு -2ஏலக்காய் -2மஞ்சள் தூள் -2 ஸ்பூன் தேன் -2 ஸ்பூன் தண்ணீர்-2 கப்

செய்முறை:-முதலில் நெல்லிகாயை வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். பின்பு காய்ந்த கனியை மிக்சியில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி அதில் அரைத்த நெல்லிகாய் பொடி, மிளகு,கிராம்பு, ஏலக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

கொதித்த நீரை நன்றாக வடிகட்டி அதில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.. இதை தினமும் குடிக்காமல் வாரத்தில் ஒரு முறை குடித்தால் போதுமானது..

முக்கிய குறிப்பு:- நெல்லிக்காய் நீரை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளாமல் ஏதாவது ஒரு ஆதாரம் எடுத்து கொண்ட பிறகு இதை குடித்தால் மிகவும் சிறந்தது.

More News >>