1 வருடமாக இரவில் காதலியை வீட்டுக்கு கொண்டு வந்து பலாத்காரம் பெற்றோர்களுக்கு கூட தெரியாது.
1 வருடத்திற்கு மேலாக இரவில் காதலியை வீட்டுக்கு கொண்டுவந்து பலாத்காரம் செய்துவந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த விவரம் இருவரின் பெற்றோர்களுக்கும் கூட தெரியாது. கேரள மாநிலம் இடுக்கியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள சேலச்சுவடு என்ற இடத்தை சேர்ந்தவர் தேவன். இவருக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ளார். பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் இவர் அங்குள்ள ஒரு சுற்றுலா விடுதியில் பணிக்கு சென்றார். தற்போது இவர் கட்டிட மேஸ்திரி பணிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் இந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரது வீடுகளும் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் தான் உள்ளன.
இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை தினமும் அவரது வீட்டிலிருந்து பைக்கில் வாலிபர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்வார். இரு வீட்டினரும் நன்றாக உறங்கிய பின்னர் இரவு 10 மணிக்குப் பிறகு தான் இந்த சம்பவம் நடைபெறும். பைக்கில் செல்லும் அந்த வாலிபர் காதலியின் வீட்டுக்கு சிறிது தொலைவில் பைக்கை நிறுத்திவிட்டு செல்வார். பின்னர் அவரது வீட்டினர் உறங்கி விட்டார்களா என்பதை உறுதி செய்த பின்னர் நைசாக அழைத்து வந்து பைக்கில் ஏற்றி தன்னுடைய வீட்டுக்கு கொண்டு செல்வார். பின்னர் தன்னுடைய பெற்றோருக்கு தெரியாமல் நைசாக காதலியை தனது அறைக்கு கொண்டு சென்று விடுவார். பின்னர் இரவு முழுவதும் அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். காலை விடிவதற்கு முன்பாகவே 5 மணிக்கு எழுந்து காதலியை அவரது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டு விடுவார்.
இப்படி கடந்த 1 வருடத்திற்கு மேலாக இந்த சம்பவம் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவும் அந்த வாலிபர் தன்னுடைய காதலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர்களது போதாத காலம், இரவில் நன்றாக இருவரும் தூங்கி விட்டனர். காலை 7 மணிக்கு பின்னர் தான் இருவருக்கும் தூக்கம் கலைந்தது. நன்றாக பொழுது விடிந்து விட்டதை உணர்ந்த இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் வீட்டுக்கு சென்றால் சிக்கலாகி விடும் என்பது இருவருக்கும் தெரியும். இதனால் அன்று பகல் முழுவதும் காதலியை தன்னுடைய வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்க அவர் தீர்மானித்தார். ஆனால் காலை நீண்ட நேரமாகியும் மகள் எழுந்திருக்காததால் அவரது பெற்றோர் சந்தேகமடைந்து அறைக்கதவை திறந்து பார்த்த போது மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் இடுக்கி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் உடனடியாக மாணவியை தேடும் பணியை முடுக்கி விட்டனர். அவரது செல்போனை பரிசோதித்த போது டவர் லொக்கேஷன் அப்பகுதியிலேயே இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அங்குள்ள தேவனின் வீட்டில் மாணவி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து தேவனின் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரித்தனர். ஆனால் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தேவன் கூறினார். போலீசார் வீட்டுக்குள் சென்று தேவனின் மகனுடைய அறையை திறந்து பரிசோதித்த போது கட்டிலுக்கு அடியில் மாணவி ஒளிந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது தான் கடந்த 1 வருடத்திற்கு மேலாக நடந்து வந்த இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் போலீசார் அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவியை பின்னர் அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.