கஞ்சா - கோகைன் பயன்படுத்துவார்... பாகிஸ்தானை அதிரவைத்த குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒரு முன்னாள் கிரிக்கெட்டர் என்பது நாம் அறிந்ததே. இவர் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில், வேக பந்துவீச்சாளராக இருந்தவர் சர்பராஸ் நவாஸ். 1970 கள் மற்றும் 1980 களில் பாகிஸ்தான் அணியின் தூணாக இருந்தனர் இருவரும். அப்போது நடந்த சம்பவங்களை குறித்து பேசியுள்ளார். அதுதான் தற்போது பாகிஸ்தானில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கஞ்சா - கோகைன் பயன்படுத்துவார் என்பதே அந்த பழைய சம்பவம்.

இதுதொடர்பாக நவாஸ் கூறியபோது, ``1987 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இம்ரான் சரியாக பந்து வீசவில்லை. இதன்பின் பாகிஸ்தானுக்கு திரும்பியதும் என் வீட்டுக்கு வந்தார் இம்ரான். மொயின் கான், அப்துல் காதிர், சலீம் மாலிக் ஆகியோருடன் என் வீட்டில் உணவு உட்கொண்ட இம்ரான், அப்போது கஞ்சா பயன்படுத்தினர். மேலும் கோகைன் பயன்படுத்தும் பழக்கமும் அவரிடம் இருக்கிறது. லண்டனிலும் இந்த செயல்களை செய்துள்ளார் இம்ரான். மேலும் இந்த சுற்றுப்பயணத்தின்போது லண்டனில் எதையாவது சாப்பிட்டு குறட்டை விட்டு தூங்கி விடுவார்" எனக் கூறியுள்ளார்.

More News >>