வித்யாபாலன் ஷூட்டிங்கில் பாலியல் தொல்லை: வில்லன் நடிகர் திடீர் கைது..
ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை என்பது நடந்து வருகிறது. மீ டு இயக்கம் மூலம் ஹாலிவுட் நடிகைகள் தங்களுக்கு தரப்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பகிரங்கமாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து இந்தியாவில் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர்) தனக்கு படப்பிடிப்பின்போது நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை தந்ததாக தெரிவித்ததுடன் போலீசில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாருக்கு தகுந்த ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி செய்யபட்டது. அதன்பிறகு தனுஸ்ரீ தத்தா வெளிநாட்டுக்கு சென்று விட்டார். நானா பாடேகரின் ஆட்கள் அவரையும் அவரது குடும்பத்தையும் மிரட்டியதால் அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக சமீபத்தி தனுஸ்ரீ தெரிவித்தார். இந்நிலையில் அவர் மீண்டும் சில மாதங்களுக்கு மும்பை திரும்பினார்.
அதேபோல் நடிகை பாயல் கோஷ் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறியதுடன் போலீசில் புகார் அளித்தார். அதை மறுத்த அனுராக் போலீஸ் விசாரணைக்கும் சென்றார். பாயல் கோஷ் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறும் நாளில் தான் வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருந்ததாக அனுராக் கஷ்யாப் தெரிவித்தார். இதன் மீதான விசாரணை நடந்து வருகிறது. நானா படேகர் தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் வில்லனாக நடித்தவர் அதேபோல் அனுராக் காஷ்யப் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர். இந்நிலையில் மற்றொரு தமிழ் வில்லன் நடிகர் ஒருவர் படப்பிடிப்பு தளத்திலேயே பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது. தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை மற்றும் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படங்களில் வில்லனாக நடித்தவர் விகாஸ் ராஸ். மேலும் இந்தியில் டெல்லி பெல்லி, பாம்பே டு கோவா, கம்பெனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் கோண்டிய என்ற இடத்தில் வித்யாபாலன் நடிக்கும் ஷெர்வி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விகாஸ். அங்கு படக்குழுவில் இருந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தாராம். இதுகுறித்து கோடியா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விஜய் ராஸை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலையானார். கோண்டி யா கூடுதல் சூப்பிரெண் டெண்ட் அதுல் குல்கர்னி இது குறித்து கூறும் போது, படப்பிடிப்பில் பங்கேற்ற படக்குழு பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்ததாக விஜய் ராஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்றார். விஜய் ராஸ் படங்களில் நடித்து வருவதுடன் 2014ம் ஆண்டு திரைப்படம் ஒன்றையும் இயக்கி உள்ளார். தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படம் கங்குபாய் கதிவாடி படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அலியாபட் டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.