`இது கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட கலங்கம்!- கதறும் வார்னர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை விதிகளுக்கு புறம்பாக சேதப்படுத்திய விஷயத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து முதன்முறையாக பேசியுள்ளார் வார்னர். வார்னர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து, `ஆஸ்திரேலியா மற்றும் உலகின் பல்வேறு மூலையில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு என் தற்போதைய நிலை குறித்து சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
சில தவறுகள் செய்யப்பட்டுவிட்டன. அது கிரிக்கெட் விளையாட்டையே பாதித்துள்ளது. நான் செய்த தவறுக்கு வருந்துகிறேன். அதற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த சம்பவம் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிவேன்.
இது நான் சிறு வயதிலிருந்து நேசிக்கும் விளையாட்டு மீது மிகப் பெரிய கரையை ஏற்படுத்தியுள்ளது. நான் சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து விலகி என் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிடப் போகிறேன். இது குறித்து என்னிடமிருந்து விரிவான விளக்கத்தை சீக்கிரமே தெரிவிப்பேன்’ என்று கதறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com