அண்ணா பல்கலைக்கு உயர் அந்தஸ்து வேண்டாம் : மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

உலக தரவரிசை பட்டியலில் இடம்பெறும் வகையில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்து 5 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு கல்வியாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் வசம் சென்றால், ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். இது குறித்து ஆராய உயர்கல்வித் துறையால் அமைக்கப்பட்ட 5 அமைச்சகர்கள் கொண்ட குழு இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிக்க பரிந்துரை செய்தது.

இதற்கு மத்திய அரசு உறுதியான பதில் அளிக்காத நிலையில், சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய கல்வி அமைச்சகத்திடம் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் அடங்கிய குழு கடிதம் எழுதியுள்ளது. இதைத் தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து தொடர்பாக 2017ல் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையையும் தமிழக அரசு திரும்பப் பெற்றது.

More News >>