அம்மன் ஆட்டம் ஆடி பாடிய பாடகியை பாராட்டிய ஏ.ஆர். ரஹ்மான்.. ஆக்‌ஷன் அம்மா ஈஸ் பேக்..

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், தொடக்கம் முதலே திரை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திரைப்படமாகவுள்ளது. உலகளவில் டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் வரும் தீபாவளி நன்நாளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் ஆச்சர்யம் தரும் க்ளைமாக்ஸ் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. "மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்த க்ளைமாக்ஸ் 7500 துணை நடிகர்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

இக்காட்சியை படமாக்குவது இயக்குநர்கள் குழு ஆர்.ஜே. பாலாஜி, என்.ஜே சரவணன் ஆகியோருக்கும் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் கடுமையான சவாலாக இருந்தது. மிகக்குறுகிய காலத்தில் கடும் உழைப்பில் மிகப்பெரும் ஜனத்திரள் கொண்டு இக்காட்சியை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். “மூக்குத்தி அம்மன்” திரைப் படத்தை ஆர்,ஜே. பாலாஜி, என்.ஜே. சரவணன் உடன் இணைந்து இயக்கியுள்ளார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி K கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய அம்மன் பாடல் ஆடி குத்து அம்மன் பாடல் என்ற தலைப்பில் யூடியுபில் வெளியானது. இந்த பாடலில் எல் ஆர் ஈஸ்வரி தனது வழக்கமான பாணியில் ஆட்டம் ஆடியபடி பாடி உள்ளார். தற்போது அப்பாடல் ஒரு மில்லியன் வியூஸ் தாண்டி இருக்கிறது.

இப்பாடலை பார்த்த பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடகி எல் ஆர் ஈஸ்வரி பாராட்டை அள்ளி குவித்திருக்கிறார். கேட்டு அம்மா பேக் இன் ஆக்‌ஷன் வித் சானங் (ஆக்‌ஷனுடன் பாட்டு பாட எல் ஆர்.ஈஸ்வரி அம்மா திரும்ப வந்துவிட்டார்) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஆடி குத்து பாடல் மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து வெளியாகி உள்ளது என்று பாராட்டி இருக்கிறார். ரஹ்மானின் பாராட்டுக்கு இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி நன்றி தெரிவித்திருக்கிறார்.

More News >>