நல்லா படம் பண்ணா இயக்குனருக்கு கார் பரிசு.. செலவை இழுத்துவிட்டால் டோஸ்..
கோலிவுட்டில் இயக்குனர்களில் பல வகையினர் இருக்கின்றனர் பட்ஜெட்டை பொருத்தவரையில் செலவை இழுத்துவிடும் இயக்குனர்கள், பட்ஜெட் குறைவாக இருந்தாலும் நல்ல படம் தருபவர்கள். இயக்குனர்கள் ஷங்கர். அட்லிக்கு பிரமாண்ட செலவில் படங்களை எடுத்தே பழக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் சிந்திப்பதே ஹாலிவுட் நிகரான படங்கள் தான் அதற்கு 100 கோடி எல்லாம் போதாது. விஜய் நடித்த பிகில் படத்தை அட்லீ இயக்கியபோது அப்பட தயாரிப்பாளர் பட்ஜெட்டை மீறி இயக்குனர் செலவு இழுத்துவிடுவதாக புகார் கூறினார். தற்போது ஷங்கர் அந்த புகாருக்குள்ளாகி இருக்கிறார். இந்தியன் 2 படத்துக்கு போடப்பட்ட பட்ஜெட்டை அதிகமாக இழுப்பதாக லைகா நிறுவனம் ஆரம்பத்திலேயே புகார் கூறியது.
அதன் பிறகு பட்ஜெட்டை கொஞ்சம் குறைத்துச் சொல்லி ஷூட்டிங் தொடங்கினார். கொரோனா காலத்துக்கு பிறகு மீண்டும் பட்ஜெட் பிரச்சனை தலை தூக்கி உள்ளது. மீண்டும் பட்ஜெட்டை குறைக்க சொல்லி தயாரிப்பு நிறுவனம் இயக்குனரிடம் கேட்க ஷங்கர் மறுத்திருக்கிறார். இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. சமீபத்தில் ஒடிடியில் வெளியான படத்தை இயக்கிய இயக்குனர் சொன்ன பட்ஜெட்டில் படத்தை எடுத்து வெற்றி படமாக்கியதாக அவருக்கு அப்பட தயாரிப்பாளர் ஒருவர் கார் பரிசளித்தார். கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் கே.ஜே.ராஜேஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியானது க/பெ ரணசிங்கம் திரைப்படம்.
இப்படம் மக்களின் ஏகோபித்த ஆதரவினால் பெருவெற்றி பெற்றது. அதன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தயாரிப்பாளர் ஜே.ஜே. ராஜேஷ் அத்திரைப்பட இயக்குனர் பெ.விருமாண்டிக்கு மாருதி எக்ஸெல் காரை பரிசாக அளித்தார் அந்த காரை அவர் நேராக ஓட்டிச் சென்று தனது குடும்பத்தாரிடம் காட்டி மகிழ்ந்தார். ஏற்கனவே சூர்யாவுக்கு சொன்ன பட்ஜெட்டில் வெற்றிகரமான படம் இயக்கி அளித்த இயக்குனர் ஹரிக்கு சூரியா கார் பரிசளித்திருந்தார்.