இயக்குநர் சீனு ராமசாமி, உதயநிதி ஸ்டாலினுக்கு சூட்டிய புதிய பட்டம்!
இயக்குநர் சீனு ராமசாமி, உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பட்டம் ஒன்றை சூட்டியுள்ளார். இது ட்விட்டரில் செம வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த, `தர்மதுரை’ படம் வெற்றிக்குப் பிறகு ஓய்விலிருந்த இயக்குநர் சீனு ராமசாமி, கடகடவென அடுத்தத் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், தமன்னா மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படமான `கண்ணே கலைமானே’-தான் சீனு ராமசாமியின் அடுத்தப் படம்.
இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் சீனு. இந்நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், படத்தின் கதாநாயகனான உதயநிதி ஸ்டாலினுக்கு `மக்கள் அன்பன்’ என்று பட்டம் கொடுத்துள்ளார் சீனு.
இது குறித்து அவர், `கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை மக்கள் அன்பன் என்றே அழைக்கத் தோன்றியது’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com