அடிக்குமேல் அடி வாங்கிய இந்தியப் பங்குச்சந்தை: நிதியாண்டின் மோசமான முடிவு!

மார்ச் மாத வர்த்தகத்தின் இறுதி வேலை நாளான நேற்று மும்பையில் உள்ள வர்த்தக மையம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்த நிதியாண்டின் இறுதி வாரத்தில் கடந்த இரண்டு நாள்களாக நிஃப்டி ஏற்ற இறக்கத்திலே இருந்து வந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு நாள்களுக்கு முன்னர் தொழில்நுட்பப் பிரிவில் சீன இறக்குமதி தொடர்பான நடைமுறைகளை முறைப்படுத்த உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பை அடுத்து உலக வர்த்தகமே ஆட்டம் கண்டுள்ளது.

உலகச் சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம் எனப் பல காரணிகளாலும் இந்தியப் பங்குச்சந்தை நிதியாண்டின் இறுதி நாளில் வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

2017-18 நிதியாண்டின் இறுதியில் மும்பை பங்க ச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 205 புள்ளிகள் சரிந்து 32,968 புள்ளிகளாகி நின்றது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் 62 புள்ளிகள் சரிந்து 10,121 புள்ளிகளாக நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக 2017-18 நிதியாண்டின் மொத்த வருவாய் வளர்ச்சியாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3,348 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட 11.3 சதவிகித வளர்ச்சி ஆகும். இதேபோல், நிஃப்டி கடந்த ஆண்டைவிட 10.2 சதவிகிதம் உயர்ந்தே நிறைவடைந்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>