பள்ளிகளில் சாதி எதற்கு? ஒட்டுமொத்தமாக எதிர்த்து செயல்பட்ட கேரள மாணவர்கள்!

கேரளாவில் சுமார் லட்சம் மாணவர்கள் தங்கள் பள்ளிச் சான்றிதழில் சாதிப் பெயரைக் குறிப்பிடாமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் 2017-18 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1,23,630 மாணவர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தில் சாதிப் பெயர் எழுதவேண்டிய இடத்தை காலியாகவிட்டு சாதிக்கு எதிரான அவரவர் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

சாதிக்கு எதிரான மிகச்சிறந்த நடவடிக்கை பள்ளி மாணவர்களால் செயல்படுத்தப்பட்டுள்ளது என கேரள கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் கேரள சட்டசபையில் மிகப்பெருமிதமாகத் தெரிவித்துள்ளார். சாதிக்கான இடத்தை நிரப்பாமல் விடுத்ததன் மூலம் சாதிக்கு எதிரான நிலைப்பாடு பள்ளி மாணவர்களிடம் அவர்களின் பெற்றோர்களிடமும் உள்ளது வரவேற்கத்தக்க சாதனை என கேரள அரசும் பெருமை கொண்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>