முகத்துல பழுப்புகள் அதிகமா வருதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...
நமது சருமம் மிகவும் மெருதுவான ஒன்றாகும். அச்சருமத்தில் கடுமையான வெயில் தாக்கும் பொழுது முகம் பழுப்புகள் அடைந்து அது நாளடைவில் நம் முகத்திலே தங்கி விடுகின்றது. இதனை விரட்டுவது எல்லா பெண்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாகும். ஆனால் இதனை நாம் இயற்கையான முறையிலே மிக எளிமையாக விரட்டி விடலாம். இதனால் எந்த பக்கவிளைவுகளும் நம்மை நெருங்காது. சரி வாங்க பழுப்புகளை போக்கும் பேஸ்ட் தயாரிப்பதைப் பற்றிப் பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
வெள்ளரிக்காய் -2-3 துண்டுகள் தர்பூசணி - 3 துண்டுகள் தயிர் - 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன் தேன் -1 ஸ்பூன்
செய்முறை:-
முதலில் வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணியில் இருந்து 3 துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். மிக்சியில் வெள்ளரிக்காய், தர்பூசணி, தயிர், தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு பௌலில் மாற்றி கொள்ளவும். பிறகு முகத்தில் கெமிக்கல் எதுவும் சேர்க்காமல் வெறும் தண்ணீரில் அலசி கொள்ளவும். ஒரு காட்டன் துண்டில் முகத்தை ஒத்தி எடுக்கவும்.
பிறகு அரைத்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் முழுவதுமாக தேய்க்க வேண்டும். ஒரு 20 நிமிடம் ஊற விட்ட பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்.
பிறகு அதே காட்டன் துண்டை வைத்து தண்ணீரை ஒத்தி எடுத்துக் கொண்ட பிறகு கெமிக்கல் பொருள்களான சோப்பு போன்றவை ஒரு 2 மணி நேரத்திற்கு எதுவும் முகத்தில் பயன்படுத்தக் கூடாது. இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு ஒரு மூன்று முறை பயன்படுத்தினால் உடனடி தீர்வு காணலாம்.