ருசியான குதிரைவாலி குழிப்பணியாரம்nbsp..

ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. இந்த ருசியான குதிரைவாலி குழிப்பணியாரம் எளிதாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

தேவையானப் பொருட்கள் :

இட்லி அரிசி - அரை கிலோ

குதிரைவாலி அரிசி - ஒரு கப்

உளுந்து - 200 கிராம்

கடலைப் பருப்பு - 50 கிராம்

கடுகு - ஒரு டீஸ்பு+ன்

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

பெரிய வெங்காயம்- 2

பச்சைமிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் குதிரைவாலி அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு நன்றாக ஊறியாதும் அனைத்தையும் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும்.

பிறகு, பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப் பருப்பை நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு, ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத் தூள் போட்டு நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள மாவை வதக்கியவற்றை சேர்த்து அதில் வறுத்த கடலைப்பருப்பை கலந்து கொள்ளவும். அடுப்பில் பணியாரச் சட்டியை காய வைத்து, சிறிதளவு எண்ணெய் விட்டு, பின்னர் மாவை ஊற்றி, இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் ருசியான குதிரைவாலி குழிப்பணியாரம் தயார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>