எண்ணூர் ரவுடி உட்பட 3 பேர் கோவில்பட்டியில் கைது..
திருவாரூரைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன். இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளது. இருந்தும் போலீசின் பிடியில் தனசேகரன் சிக்கவில்லை. இந்த நிலையில் இவர் மேலும் சிலருடன் கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாக கோவில்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் எண்ணூர் தனசேகரன் மற்றும் அவருடன் இருந்த மதன்குமார், வழக்கறிஞர் அருள்ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சென்னையில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து சில போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தனசேகரன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு முக்கிய பிரமுகரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியதாகவும் அதற்காகவே கோவில்பட்டிக்கு வந்து தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களுடன் வந்த டிரைவர் அம்பேத் என்பவன் தப்பி ஓடி விட்டதால் அவனை போலீசார் தேடி வருகின்றனர்.