கலியுகம் 2050ல் இந்தியாவில் என்ன நடக்கும்.. 2012 பூகம்ப பட பாணியில் ஒரு திகில்..
கடந்த 2009ம் ஆண்டு 2012 என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் படம் உருவானது. உலகம் அழிவதை மையமாக வைத்து இப்படம் உருவானது. உலக முழுவதும் பூகம்பம் உருவாகி எல்லா நாடுகளும் வரிசையாக அழியும். அதிலிருந்து தப்பிப்பவர்கள் ஸ்பெஷல் ஸ்பேஷ் ஷிப்பில் ஏறி உலகில் அழியாத பகுதியைத் தேடிச் செல்வார்கள். இப்படம் வெளியாகி உலக அளவில் வசூலை அள்ளிக்குவித்தது. ஒரு சில பிரபலங்கள் இப்படத்தைப் பார்த்து இப்படியா கொடூரமான முறையில் உலகம் அழியப்போகிறது என்று அச்சம் அடைந்து கண்ணீர் சிந்தினார்கள். தற்போது கலியுகம் என்ற பெயரில் 2050 என்ற திகில் படம் தமிழில் உருவாக உள்ளது.
அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது அடுத்த கோலிவுட்டில் படத்தில் நடிக்கும் ஒப்புக் கொண்டிருக்கிறார். கலியுகம் என்ற தலைப்பில் ஒரு திகில் திரில்லர் படமாக இது உருவாக உள்ளது. இது தெலுங்கிலும் தயாரிக்கப்படும். இப்படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் பிரமாத் சுந்தர் இயக்குகிறார். அவர் கூறும்போது, “இது ஒரு தீவிரமான கதை மற்றும் அபோகாலிப்டிக் காலகட்டத்துக்கு பிந்தைய கதையாக இது உருவாக உள்ளது.இந்தியாவில் என்ன நடக்கும் என்பது குறித்து ஒரு தனித்துவமாக எடுத்துக் காட்ட இப்படம் இருக்கும். இது 2050 ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக அமைக்கப்படும், இதற்கு முன்னர் யாரும் இதுபோல் ஒரு கதைக் கருவைத் தொட்டதில்லை. குறிப்பாக இப்போது நாம் என்ன கையாள்கிறோம் என்பதன் காரணமாக அடுத்த சம்பவங்கள் தொடர்கின்றன.
அதைத்தான் அனைவரும் கையாண்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த விஷயங்களுக்கு ஈடுசெய்ய முடியாததாகவோ அல்லது அதைவிட அதிகமான எதிர் வினையாகவோ மாறினால் என்ன நடக்கும்? என்பது கலியுகத்தில் தெரிய வரும். ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடும் படமாக இது இருக்கும்" என்றார்.மேலும் அவர் ஷரத்தா ஸ்ரீநாத் இப்படத்தில் நடிப்பது பற்றிக் கூறும்போது,இருமொழிகளுக்கும் பொதுவான முதல் தேர்வாக ஷரத்தா இருந்தார். நாங்கள் ஒரு டீஸர் ஷூட் செய்து அவருக்கு அனுப்பினோம், அது அவரை கவர்ந்தது. பின்னர் ஜூம் வீடியோவில் அழைத்துப் பேசினோம். ஷ்ரத்தாவின் பங்கு சுவாரஸ்யமானது; அவர் எப்போதும் வித்தியாசமான பாத்திரங்களைத் தேர்வு செய்வார்.
எங்கள் டீம் இளைஞர்களைக் கொண்டது. விளம்பர பின்னணியிலிருந்து நான் வருகிறேன் சில குறும்படங்கள் இயக்கி உள்ளேன். ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 2050 படத்துக்கு இரண்டு அரங்குகள் அமைக்கப்படுகின்றன என்றார் புரமோத்.