அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் சரமாரி கேள்வி..

மதுரையைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா ,"அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கின்றனர். இவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். ஆகவே, மருத்துவர்கள் எந்த விதத்திலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தடை விதிக்க கோரி ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதைப் படித்த நீதிபதிகள் அரசின் பதில் மனு திருப்திகரமாக இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் கிராமப் புறப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது? கிராமங்கள் பகுதிகளில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சென்று வரப் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? மருத்துவர்களின் ஆரம்பக் கால ஊதியம் எவ்வளவு ? அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆரம்பக் கால ஊதியம் எவ்வளவு ? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.இது குறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

More News >>