78 வயது முதியவரை திருமணம் செய்து கொண்ட 17 வயது பெண்.. திருமணம் முடிந்து 2 வாரத்தில் நடந்த சோகம்..!

இந்தோனேசியாவில் 78 வயது முதியவர் ஒருவர் 17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டே வாரத்தில் பிரிந்த சம்பவம் இரண்டு குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தோனேசியாவை சேந்தவர் அபாஹ் சர்னா. இவருக்கு 78 வயது நடந்து கொண்டு இருக்கிறது. அதே ஊரில் வசிக்கும் நோனி நவிதா என்னும் 17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் புகைப்படங்கள் உலகம் முழுவதும் வைரலாகி வருகின்றது. ஆனால் திருமணம் ஆகி இரண்டே வாரத்தில் அபாஹ் அவர்கள் நோனி நவிதாவிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று நோட்டிஸை அனுப்பியுள்ளார். இதை கண்டு நோனி நவிதா குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கினர்.

நோனியின் சகோதரியான இயான் இவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை ஆணி தனமாக கூறினார். இருப்பினும் இவர்கள் இருவனின் பிரிவுக்கு என்ன காரணமாக இருக்கும் என்று அனைவரும் தீவிரமாக யோசித்து கொண்டிருந்தனர். அப்பொழுது திருமணம் ஆகும் முன்பே நோனி நவிதா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த விஷயம் அபாஹ்க்கு தெரியவர கோபமடைந்து இனிமேல் நோனியுடன் வாழ முடியாது என்பதற்காக விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் நோனியின் சகோதரியான இயான் இந்த குற்றச்சாற்றை உண்மை இல்லை என்று மறுத்துவிட்டார்.

நோனி நவிதாவை திருமணம் செய்ய அபாஹ் சர்னா இந்தியா பணமதிப்பில் 50,000 ரூபாய், கட்டில், சோபா போன்ற பொருள்களையும் சீதனமாக கொடுத்துள்ளார். இந்தோனேசியாவில் மாப்பிளை வீட்டில் இருந்து பெண் வீட்டிற்கு சீதனம் கொடுத்து கல்யாணம் செய்து கொள்வது இன்று வரை வழக்கமாக நடந்துவருகிறது..

More News >>