இந்த போலீஸ்காரர் செய்த வேலையை பாருங்கள்... வைரலாகும் வீடியோ

'காவல்துறை உங்கள் நண்பன்' என்று கூறப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காவல்துறையினரைப் பற்றி பொதுவாக யாருக்கும் அப்படி எண்ணம் எழுவதில்லை. போக்குவரத்து நெரிசலான நேரத்திலும் விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதை மட்டுமே பார்த்திருக்கலாம். ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறையை சேர்ந்த ஒரு காவலர் கடமை உணர்ச்சியோடு செயல்பட்டதை காட்டும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி நெட்டிசன்களின் பாராட்டுதலை பெற்று வருகிறது.

ஹைதராபாத் அபிட்ஸ் போக்குவரத்து காவல்நிலையத்தை சேர்ந்தவர் ஜி. பாப்ஜி என்ற காவலர். கடந்த திங்கள்கிழமை மாலை இவர் பணியிலிருந்தபோது கோட்டி சாலையின் ஜிபிஓ சந்திப்பு என்ற இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாலை 6:30 மணியளவில் அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்து போக்குவரத்து நெரிசலால் நகர முடியாமல் நின்றுள்ளது. அதைப் பார்த்ததும் பாப்ஜி கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்திற்கு போக்குவரத்தை சரி செய்யபடியே சாலையில் ஓடி ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

ஆம்புலன்ஸின் உள்ளிருந்து யாரோ எடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தெலங்கானா நிதி அமைச்சர் டி. ஹரிஷ் ராவ், ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்ஜனி குமார் ஆகியோர், போலீஸ்காரர் பாப்ஜிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். காவல் ஆணையர் நினைவு பரிசொன்றையும் போலீஸ்காரர் பாப்ஜிக்கு வழங்கியுள்ளார். "இது என்னுடைய கடமை. முன்னரும் நாம் இதுபோல் செய்துள்ளேன். இனியும் தேவைப்பட்டால் இதுபோல் செய்வேன்," என்று காவலர் பாப்ஜி தெரிவித்துள்ளார்.

More News >>