கோவை அன்னூர் அருகே கனமழையால் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதம்

கோவை, திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மற்றும் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கணுவக்கரை, ஆம்போதி, அக்கரை செங்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் 15 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது.

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில்" இந்த பகுதியில் அதிகமாக நேந்திரன்,கதளி,ரொபாஸ்டா, குவிண்டால் ஆகியவை அதிகமாகப் பயிரிடப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.

நேற்று இரவு முதல் காற்றுடன் கூடிய பெய்த பலத்த மழையால் கணுவக்கரை கிராமத்தைச் சுற்றிப் பயிரிடப்பட்டிருந்த 15 ஆயிரம் வாழை மரங் கள் அடியோடு சாய்ந்து போனது. இன்னும் 30 நாட்களில் அறுவடை செய்யும் நிலையிலிருந்த இந்த வாதங்களின் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாயாகும். இதில் சில விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திருந்தனர். ஆனால் பயிர்க் காப்பீடு காலாவதியாகிவிட்டது என்று கூறி கூட்டுறவு சங்கத்தினர், நிவாரணம் கொடுக்க மறுத்துவிட்டனர். பயிர்க் காப்பீடு என்பது அதன் அறுவடைக் காலம் வரை இருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்யாமல் பாதியிலேயே காலாவதி ஆவதால் இது போன்ற பாதிப்புகளின் போது உரிய இழப்பீடு கிடைப்பதில்லை.

மேலும் காப்பீட்டைப் புதுப்பிக்கவும் எங்களிடம் தகவல் தெரிவிக்கப் படுவதில்லை இதன் காரணமாக இழப்பீடு பெற முடியாமல் போய்விட்டது.தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் சூழலில், இந்த பாதிப்பு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

More News >>