ஸ்பைசியான காளான் தோசை ரெசிபி.. இப்படி செஞ்சா யாருக்கு தான் பிடிக்காது..!

சைவத்தில் காளான் தான் சிக்கன். புரட்டாசி மாசத்தில் அசைவம் சாப்பிடாதவர்கள் காளானை சிக்கன் போல் எண்ணி வெளுத்துவங்குவார்கள்.காளானில் பல வகையான ரெசிபிக்களை சமைக்கலாம்.காளானும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.வாரத்திற்கு ஒரு முறை காளானை எடுத்துக்கொள்ளலாம்.சரி வாங்கக் காளானில் எப்படி தோசை செய்வது குறித்துப் பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-

காளான் -தேவையான அளவு சின்னவெங்காயம் - 100 கிராம்பூண்டு- பூண்டுமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - 1 ஸ்பூன்

செய்முறை:-

முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விடவும்.எண்ணெய் சூடான பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.ஒரு பக்கம் பூண்டின் தோலை உரித்து விழுதுகளாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்னர் மிளகுத்தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

வதக்கிய பிறகு நறுக்கிய காளானைச் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.அடுப்பில் தோசைக் கல்லை வைத்து அதில் காளான் தொக்கைப் பரப்பி நன்றாக வேக வைக்கவும்.

கடைசியில் வாசனைக்காகக் கொத்தமல்லித் தழையைச் சேர்த்துக் கொள்ளலாம். சிம்பிளான..சுவையான.. காளான் தோசை ரெடி..

More News >>