போரில் இந்தியா வெற்றி: 50 ஆவது ஆண்டு கொண்டாட்டம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் பங்களாதேஷ் உருவானது. இந்த போர் வெற்றியின் 50வது ஆண்டு வரும் டிசம்பர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு இந்தாண்டு டிசம்பர் முதல், அடுத்தாண்டு டிசம்பர் 16ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக லோகோ (அடையாள சின்னம்) ஒன்றை உருவாக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான லோகோவை, இந்தியர்களிடமிருந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வரவேற்கிறது.

இந்தப் போட்டியில் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி லோகோ உருவாக்க வேண்டும்:

* முப்படையின் பங்களிப்பை வெளிக்காட்டும் விதத்தில் லோகோ உருவாக்கப்பட வேண்டும்.

* நமது படைகளின் சாதனைகளை நினைவு கூறும் வகையில் லோகோ இருக்க வேண்டும்.

* ராணுவத் தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டால், அவை 1971ம் ஆண்டு போரில் இந்திய ராணுவம் பயன்படுத்தியதாக இருக்க வேண்டும்.

* அதில் இடம் பெறும் வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்க வேண்டும்.

லோகோவை சமர்ப்பிக்க நவம்பர் 11ம் தேதி கடைசி நாள். தேர்வில் வெற்றி பெறும் லோகோவை உருவாக்கியவருக்கு க்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இதற்கான முழு விவரங்கள், நிபந்தனைகள் போன்றவற்றை கீழேயுள்ள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்..

https://www.mygov.in/task/logo-design-contest-swarnim-vijay-varsh/ .

இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>