காஜல் திருமணத்தில் அனைவரையும் கவர்ந்த மாங்கல்யம்..! என்ன விஷயம்?
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். விஜய், சூர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகையாக திகழ்கிறார். நீண்ட காலமாக திருமணத்தை தள்ளி போட்டு வந்த காஜல் இந்த ஊரடங்கில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி கடந்த 30ஆம் தேதி தொழில் அதிபருடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் திருமணத்திற்கு பிறகு கலர்புல்லான ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
தினமும் ஒரு அழகான சேலையை அணிந்து தந்து கணவருடன் சேர்ந்து போட்டோ எடுத்து அவரது சந்தோஷத்தை பிறருடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது திருமணத்தில் அணிந்திருந்த ஆடையை விட அவரது கழுத்தில் இருந்த தாலி தான் அனைவரையும் கவர்ந்தது. அவரது தாலி வைரத்தால் ஆனது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. பாலிவுட்டை சேர்ந்த தீபிகாவும் இதே மாடலான தாலியை அணிந்துள்ளார் என்று சோசியல் மீடியா முழுவதும் செய்திகள் பரவி வருகிறது. காஜலின் அழகான, கியூட்டான போட்டோவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.