வினோத நோய்.. மகள்களின் அட்வைஸ்.. புதின் எடுத்த அதிரடி முடிவு!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பார்க்கின்சன் எனப்படும் மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாகும் நோய் தாக்குதலில் புதின் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெளியுலகில் முகம் காட்டுவதை தவிர்த்து வருகிறார் புதின் என்றும், கடந்த சில நாட்களாக கால் மற்றும் கைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வலியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருவதால் அதிபர் பதவியில் இருந்து அடுத்த ஆண்டு விலக புதின் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. புதினின் இந்த முடிவுக்கு அவரின் மகள்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அவர்கள் புதின் நோயினால் அவதிப்படுவதை பார்த்து இந்த முடிவு எடுக்க வைத்துள்ளனர். மேலும் அவர் சிகிச்சை பெற தேவையான ஏற்பாடுகளையும் கவனித்து வருகின்றனர். ஆனால் இந்த தகவல்கள் ஏதும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.