செல்ஃபி மோகம்: பள்ளத்தாக்கில் பறிபோனது பெண்ணின் உயிர்.. கணவனின் கண்முன்னர் விழுந்த மனைவி
எதன் மதிப்பு அதிகம் என்ற புரிதல் இல்லாமல் மக்கள் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுமளவுக்கு உயிரை துச்சமாக மதித்து செல்ஃபி எடுப்பது தொடர்ந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் செல்ஃபி எடுத்த பெண் கணவன் பார்த்துக்கொண்டிருந்தபோதே மலையிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் விகாஸ் பஹேடி. நேற்று (வியாழன்) இவர் தன் மனைவி நீத்து மகேஸ்வரியுடன் (வயது 30) பிக்னிக் சென்றுள்ளார். ஓம்கரேஸ்வர் என்ற இடத்திற்கு பிக்னிக் புறப்பட்ட தம்பதி, மண்டலேஸ்வர் என்ற இடத்திலிருந்து ஜாம் கேட் செல்லும் வழியில் ஓரிடத்தில் நின்றுள்ளனர். அங்கு மலையின்மேல் கணவனும் மனைவியும் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். மனைவி நீத்து செல்ஃபி எடுத்தபோது கால் தவறி 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். சம்பவ இடத்தில் உயிரிழந்த அவரது உடலை நான்கு மணி நேரம் போராடி போலீசார் மீட்டுள்ளனர்.