ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேட்டை.. பெருவில் கிடைத்த ஆதாரம்!
பண்டைய காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பணி புரிந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பெரு நாட்டில் ஹோலோசீன் என்ற இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் மொத்தம் 107 தளங்களில் புதைக்கப்பட்ட 427 நபர்களின் எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எலும்புகள் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதில் தான் பெண்களும் ஆண்களுக்கு நிகரான வேலைகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த புதைகுழிகளில் உள்ள 27 பேர் எலும்புக்கூடுகள் வேட்டை உபகரணங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆச்சர்யப்படும் வகையில், அவர்களில் 11 பேர் பெண்கள். பண்டைய காலத்தில் பெண்கள் வேட்டையாடுவதிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு சாட்சியாக இந்த ஆதாரங்கள் அமைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
மேலும் பெருவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த, 17-19 வயதுடைய ஒரு பெண்ணின் எலும்புகள் உடன், கல் எறிபொருள், கத்தி போன்ற ஒரு கலைப்பொருட்கள் மற்றும் ஒரு மிருகத்தை வெட்டுவதற்கும், அதை துடைப்பதற்கும் உள்ள பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.