வெனிசுலா சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து: 68 பேர் பரிதாப பலி
வெனிசுலா நாட்டில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 68 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெனிசுலா நாட்டின் வாலன்சியா நகரத்தில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இதில், பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த சிறைச்சாலையின் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ மளமளவென பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் சிக்கி 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், சிலர் கற்களை வீசி கலவரத்தில் ஈடுப்படவும் முயற்சித்தனர். இவர்களை, கலவர தடுப்பு பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொது மக்க¬ள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த சிறைச்சாலையில் குறிப்பிட்டுள்ள அளவைவிட அதிகளவில் கைதிகளை அடைக்கப்பட்டிருந்ததாகவும், இங்கு போதைப் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் கசிகின்றன. மேலும், சிறையில் இருந்து தப்பிப்பதற்காக கைதிகள் சிலர் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இடத்தில், 68 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அனைவரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com