ஆரியின் கடுமையான விமர்சனம் , சாமை டார்கெட் செய்யும் சுரேஷ் - என்ன நடந்தது ?பிக் பாஸ் நாள் 34
மார்னிங் டாஸ்க்ல சனம் எல்லாருக்கும் டான்ஸ் சொல்லி கொடுக்கனும். யப்பா சாமிகளா இதைவிட சுவாரசயமான சம்பவம்லாம் அன்சீன்ல வருது. எல்லாரும் ஹாட்ஸ்டார்ல பார்க்கனும்னு சதி பண்றீங்களா...
வொர்க் அவுட் பண்ணிட்டு இருந்த ஆரி திடீர்னு கேமரா முன்னாடி பேசறாரு. பாலா கிட்ட நல்ல குணங்களும் இருக்கு. அவர் நல்லது செஞ்சா மனசார பாராட்ட தயங்க மாட்டேன். அவரோட பாடி லாங்வேஜ்ல நிறைய தன்னம்பிக்கை இருந்தது. ஆனா அதுவே இப்ப அதிகமாகி ஆணவமா மாறிடுச்சு. அதை அவர் மாத்திக்கனும்னு சொன்னார். அதே மாதிரி கோர்ட்ல நான் சம்யுக்தாவை நேரடியா திட்டலை. ஒரு வேளை சனிக்கிழமை நான் செஞ்சது தப்பா இருந்தா, சம்யுக்தா கால்ல விழுந்து மன்னிப்பு கேப்பேன்னு சொன்னது உண்மையிலேயே தேவையே இல்லாத ஆணி.
அவர் செஞ்சது தப்புனு முதல்ல அவர் தான் உணரனும். அப்படி இருந்தா அங்கேயே இருக்கற சாம் கூப்பிட்டு பேசி ஒரு சாரி சொல்லி முடிச்சுருக்கலாம். சமாதானம் பேச கூப்பிட்ட போதும் மொக்கை காரணம் சொல்லி அங்கிருந்து வெளிய போய்ட்டார். அதுக்கப்புறம் எவ்வளவோ சந்தர்ப்பம் கிடைச்சிருக்கும். ஆனா அது எதையுமே செய்யாம கேமரா முன்னாடி உணர்ச்சிவசப்பட்டு பேசறது சின்னப்புள்ளத்தனமா இருக்கு ஆரி ப்ரோ.
கண்டண்ட் இல்லாத காரணத்தால 10 நிமிஷத்துல விளம்பரமே போட்டாங்கனா பார்த்துக்கோங்க.
அடுத்து வழக்கம் போல இந்த வாரம் பெஸ்ட் பர்பாமன்ஸ் தேர்ந்தெடுக்கும் நேரம். இந்த வாரம் எல்லாருமே நல்லா, சுவாரஸ்யமா விளையாடினதால ஜெயில் கிடையாதுனு சொல்லிட்டாரு பிக்பாஸ். எல்லாருக்கும் பயங்கர சந்தோஷம். சோ அதனால 3 பெஸ்ட் பர்பாமர்ஸ் மட்டும் தேர்ந்தெடுத்தா போதும்னு சொல்லிட்டாரு.
இந்த விஷயத்தை பிக்பாஸ் சொல்லும்போது யூஸ் பண்ற வார்த்தைகளை சரியா கவனிக்கனும். வாரம் முழுவதும், எல்லா விஷயங்களிலும் சிறப்பாக செயல்பட்டவர்கள் 3 பேரை தேர்ந்தெடுக்கனும். இந்த வாரம் நடந்த மொத்த டாஸ்க்கையும் பட்டியல் போட்டாங்க சாம். இப்படி தான் செய்யனும்னு போன வாரம் எழுதிருந்தேன். எல்லா டாஸ்க்கும், வேலையும் கணக்குல வரணும். அதே மாதிரி கூட்டத்துல கோவிந்தா போடற மாதிரி இல்லாம, ஒவ்வொருத்தரோட கருத்தையும் சொல்ல வைக்கனும். நேத்து சாம் அதை தான் செஞ்சாங்க. ஒவ்வொருத்தரும் 2 பேரை காரணத்தோட நாமினேட் செய்யனும். அதுல யார் மெஜாரிட்டி வராங்கனு பார்க்கனும்.
ஆரிக்கு பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் சப்போர்ட் செஞ்சாங்க. அடுத்த இடத்துல சோம், நிஷா இருந்தாங்க. போன வாரம் கேப்டன் பதவிக்கு நின்ன நிஷாவோட பேர் மாற்றப்பட்டது. சோம் கேப்டன் ஆகறது பாலாவால தடுக்கப்பட்டது என்பதாலும் காரணங்கள் சொல்லப்பட்டது. ரம்யா சோம் பேரை சொன்னதும், பதிலுக்கு சோம் ரம்யா பேரை சொன்னதும், என்னய்யா நடக்குது இங்க. ஆரி பேசினதை கேட்டு கூஸ்பம்ப்ஸ் வந்ததுனு அனிதா சொன்னாங்க. ஆக, ஆரியை பார்த்து கேட்ட கேள்விக்கு சம்பந்தமே இல்லாமா, ஹை டெசிபல்ல கத்தி பேசினா பெஸ்ட்னு சொல்லிடுவாங்க போல.
ஒரு வழியா ஆரி, நிஷா, சோம் மூணு பேரும் கேப்டன் பதவிக்கு செலக்ட் ஆனாங்க.
செலக்ஷன் முடிச்சுட்டு வெளிய வரும்போது பாலா, சாம், ஆஜித் 3 பேரும் பேசிட்டு வராங்க. பாலா தனிமைபடுத்தப்பட்டான்னு, அப்படினு சொல்லிட்டே வராரு பாலா. சாம் பொறுத்தவரைக்கும் ஆரி தன்னை கீழ்த்தரமா பேசினதை வீட்ல யாருமே கண்டிக்கலைனு வருத்தப்பட்டாங்க. ஆரி பெஸ்ட் பர்பாமன்ஸ்க்கு செலக்ட் ஆகும் போது, ஆட்டோமேட்டிக்கா அவர் செஞ்சது சரினு ஆகிடுது. ஹவுஸ்மேட்ஸ் யாருமே ஆரிகிட்ட நீங்க பேசினது தப்புனு சொல்லவே இல்லையேனு சாம் கண்கலங்கினாங்க.
சாம் மேல ஆரி கோபப்பட காரணம் ரெண்டு விஷயம். ஒன்னு கேப்டன்சி டாஸ்க்ல பாலாவோட உதவியை ஏத்துகிட்டது. ரெண்டாவது சனம் vs பாலா பிரச்சினை. விதிமுறைகள் எதுவுமே இல்லாத ஒரு போட்டில, பாலா, சாம் செஞ்சது தப்புனு யாருமே சொல்ல முடியாது. அது என்னோட ஸ்டேட்டர்ஜினு பாலா அப்பவே சொல்லிட்டான். பிக்பாஸ் அதை ஏத்துக்கிட்டார். கமல் சார் முன்னாடி அது பேசப்பட்டது. ஆனா இத்தனைக்கும் மேல ஆரி அதை கடுமையா விமர்சனம் பண்றாரு. அவரோட தொடர் விமர்சனம் ஹவுஸ்மேட்ஸ் கிட்டேயும் எதிரொலிக்குது. சாம் கேப்டன் ஆனது அசிங்கம், செல்பிஷ்னு அனிதா வார்த்தையை விட்டது ஆரியோட தொடர் பிரச்சாரத்துக்கு மட்டும் தான்.
இது எல்லாத்தையும் விட இந்த பிரச்சினைல சம்பந்தப்பட்ட சோம், இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட பாலா, சாம் பத்தி தப்பா பேசலை. அப்படியிருக்கும் போது, தான் ஸ்கோர் செய்யறதுக்காக தானிந்த விஷயத்தை கையில் எடுத்துருக்காருனு தெளிவா தெரியுது.
அதே தான் பாலா, சனம் பிரச்சினையும். பாலாவும் சனமும் சண்டை போடறது இது ஒன்னும் புதுசு இல்லை. அவங்களுக்கு முன்னாடியே அறிமுகம் இருக்கு. சண்டை போட்டாலும் திரும்பவும் சேர்ந்து பேசிக்கறாங்க. இது ரெண்டு மூணு தடவை நடந்துருச்சு. எதையாவது செஞ்சுட்டு, இது என்னோட ஸ்டேட்டர்ஜினு பாலா சொல்லிக்கறா மாதிரி தான் சனமும். யாராவது ஏதாவது சொன்னா, அந்த வார்த்தையை உள்ள போட்டு ப்ராசஸ் பண்ணி, எந்த பிரச்சினையை பேசினா, ஸ்கோர் பண்ண முடியும்னு யோசிச்சு, கண்டண்டுக்காகவே சில விஷயங்கள் செய்யறாங்க. சுரேஷ் அவரை அடிச்சதா சொன்ன விஷயத்துல அவங்க எவ்வளவு முந்தயாரிப்போட இருந்துருக்காங்கனு நல்லாவே தெரிஞ்சுது. இந்த வாரமும் அர்ச்சனா பொய் சொல்லிட்டாங்கனு ஒரு பிரச்சினையை ஆரம்பிச்சு, வீட்ல மொத்த பேரும் தனக்கு எதிரா இருக்காங்கனு தெரிஞ்ச உடனே அழுது ட்ராமா செஞ்சது சனம் தான். பேச வந்தவங்களை திருப்பி அனுப்பினது கூட ஸ்டேட்டர்ஜி தான்.
தறுதலை பிரச்சினைல ரெண்டு பேர் மேலேயும் தப்பிருக்கும் போது, பாலாவை மட்டும் கண்டிக்கனும்னு சொல்றதே ஒருதலைபட்சமானது. இதுல பாலாவோட தோழிங்கற ஒரே காரணதுக்காக, அதே வார்த்தையை சாம் மேல யூஸ் பண்ணினதை நியாயப்படுத்தறவங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு மட்டும் தான் இருக்கு.
சாம் தவிர வேற யாரை பார்த்து பேசிருந்தாலும், இந்த பிரச்சினை பெருசா வெடிச்சிருக்கும். இதை வச்சு பெருசா ஸ்கோர் பண்ணிருப்பாங்க. ஆனா சாம் அப்படி செய்யலை. அது கூட நேர்மையான விஷயம் தான். ஆரி சொல்ற அதே நேர்மை, எதிக்ஸ் தான்.சாம் இந்த விஷயத்துக்கு ஹர்ட் ஆகினது ஆரிகிட்ட சொல்றாரு ரியோ. சோ அதை பத்தி பேசிருக்காரு போல.
கேப்டன்சி டாஸ்க் நடந்தது. ஆக்டிவிடி ஏரியால கண்டஸ்டண்ட் சுத்தி கயிறு கட்டி விடனும். அவங்க அதை இன்னொரு தூண்ல சுத்தி சுத்தி கட்டனும்.
ஆரி தனக்கு கயிறு கட்டி விட பாலாவை கூப்பிட்டதும் ஸ்டேட்டர்ஜி தான். ஏன்னா பாலா டாஸ்க் எப்படி செய்வான்னு எல்லாருக்கும் தெரியும். டாஸ்க் ஆரம்பிச்ச போது சோம், நிஷா ரெண்டு பேரும் ரிவர்ஸ்ல சுத்த ஆரம்பிச்சது தான் பிரச்சினை. ஆனா ஆரி நேரா சுத்தினாரு. ஒரு கட்டத்துல சோம் தான் முண்ணனில இருந்தாரு. ஆனா அவரை சுத்தி கட்டியிருந்த கயிறுல சிக்கல் விழுந்துச்சு. அதனால ஆரி ஜெயிச்சாரு. நிஷா தலை சுத்தி கீழ உக்காந்துட்டாங்க.
உடல் பலத்தை வச்சு ஜெயிக்கற டாஸ்க்ல ஆணையும் பெண்ணையும் சரிக்கு சமமா போட்டிக்கு நிறுத்த முடியாது. ஒரு வகைல இது சமமான போட்டி இல்லனு தான் சொல்லனும்.ஆரி கேப்டன் ஆனார். அடுத்த காட்சிலேயே தனக்கான அணியை தேர்ந்தெடுத்து சொல்லிட்டாரு.
அதுக்கப்புறம் ப்ரீத்தி மிக்சி வழங்கிய ஒரு டாஸ்க் நடந்தது. அதுல அர்ச்சனா, ஆரி, சோம் டீம் ஜெயிச்சாங்க. அதுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட் ஒன்னு வந்தது. அதுல வந்த பர்கரை சாப்பிடும் போது ஷிவானி கொடுத்த ரியாக்சன் இருக்கே...
ரியோவும், சோமும் சேர்ந்து கேப்பியை கலாய்ச்வுட்டு இருந்தாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் நல்லா செட் ஆகிருக்கு. சோம் இந்த வாரம் தப்பிச்சா நமக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கு.
நைட்டு சுரேஷ் vs சாம் பேசறாங்க. சுரேஷ் கேஸ் நடக்கும் போது கேப்டன்ங்கற முறைல சாம் பேசினது தப்புனு சுரேஷ் நினைக்கறாரு. அதனால நேத்துல இருந்து முறுக்கிட்டு திரியறாரு. இதுவும் ஒரு ஸ்டேட்டர்ஜி தான். தன் இருப்பை காமிச்சுக்கனும்னு செய்யற விஷயம். ஆனா இவரும் சாமை டார்கெட் செஞ்சதால , ஏற்கனவே கொஞ்சம் டவுனா இருந்த சாம் சுரேஷும் சேர்ந்து பேசினதுல உடைஞ்சுட்டாங்க. உள்ளெருந்து வெளிய, வெளிய இருந்து உள்ளேன்னு சுத்தி சுத்தி பேசிட்டு இருந்தாரு சுரேஷ். அவர் ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தது நல்லா தெரியுது.
சுரேஷ் பேசிட்டு போனதுக்கு அப்புறம் சாம் அழறாங்க. கொஞ்ச நேரத்துல சிரிக்கறாங்க. அவங்க அழுகறதுக்கு நான் காரணம் இல்லைனு தெளிவுபடுத்தின சுரேஷ், சாம் சிரிச்சது தன்னை பார்த்து தான்னு முடிவு பண்ணிக்கலாமானு கேட்டது அநியாயம்.
இன்று உலக நாயகன் பிறந்த நாள். இன்னிக்கு என்ன ஸ்பெஷல்னு வெயிட் பண்ணி பார்ப்போம்.