ரூ.39000 தாண்டியது தங்கத்தின் விலை 07-11-2020!

கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் விலையில் மாற்றமில்லாமல் நீடித்தது. ஆனால் இந்த வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலை சற்று உயர வாய்ப்புள்ளது.

இந்த மாதத்தில் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் உள்ளதால் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நேரடி வாக்குப்பதிவு, சந்தையின் முடிவில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்‌. தீபாவளி நெருங்குவதால் அடுத்த வாரம் தங்கத்தின் விலையில் பெரிய அளவு மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4867 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் கிராமுக்கு 17 விலை உயர்ந்து, கிராமானது ரூ‌ 4884 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் - 48848 கிராம் ( 1 சவரன் ) - 39072

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5247 க்கு விற்பனையானது. இன்று தங்கத்தின் விலை ஏற்றத்தினால் கிராமானது 17 விலை உயர்ந்து, கிராமானது 5264 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 52648 கிராம் - 42112

வெள்ளியின் விலை

தங்கத்தின் விலை உயரும்போது, வெள்ளியின் விலை குறையத் தொடங்கும் ஆனால் பண்டிகை தினங்கள் நெருங்குவதால், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 50 பைசா விலை உயர்ந்து, கிராம் 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 70000 க்கு விற்பனையாகிறது.

More News >>