முட்டை விலை தொடர் சரிவு..
தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 3.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் கேரளத்திற்கும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் வழங்கப்படுகிறது. இது தவிர மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது .
கடந்த சில நாட்களாக முட்டையின் விலை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் முட்டை விலை 45 காசுகள் குறைந்துள்ளது.முட்டையின் நுகர்வும், விற்பனையும் குறைந்துள்ளது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை குறைந்து வருகிறது. இதுவே விலை சரிவுக்குக் காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள்.
தற்போது முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.30 ஆக நிர்ணயம்.இதுவே நேற்று முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையாக 4 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. முட்டை விலையைத் தினமும்தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயித்து வருகிறது.